வேப்பனஹள்ளி அருகே பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற மாபெரும் எருது விடும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற மாபெரும் எருது விடும் விழாவில் 300 எருதுகள்பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாகக் கடந்த எருதுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது.

இந்த எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ஒசூர், ராயக்கேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, தர்மபுரி, ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 க்கு மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டது. அரசின் வழிக்காட்டுதலின் படி அனைத்து எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில்120 மீட்டர் தூரத்தைமிக குறைந்த நேரத்தில் விரைவாக ஓடிய எருதுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள். பின்னர் வெற்றி பெற்ற எருதுகளுக்கு முதல் பரிசாக 1 லட்சத்து 50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக 90 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 50ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.30 ஆயிரம் என 100 பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு எருது விடும் இந்த விழாவினை உற்சாகமாக கண்டுகளித்தனர். இந்த எருது விடும் விழாவிற்கான ஏற்பாடுகளை கங்கோஜிகொத்தூர் கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
