கிருஷ்ணகிரியில் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழா.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழா.!

கிருஷ்ணகிரியில் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் செங்குட்டுவன் வழங்கி சிறப்பித்தார்.

கிருஷ்ணகிரியில்  விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு அரசு முன்னாள் பொது வினியோக திட்ட ஆலோசனைக்குழு உறுப்பினருமான டாக்டர் சந்திரமோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழைஎளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைப்பெற்றது.

இவ்விழா கிருஷ்ணகிரி பழையப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள முருகன் மஹாலில் நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  செங்குட்டுவன், முன்னாள் திமுக நகர செயலாளர் நவாப் மற்றும் காட்டகரம் ஓம் சத்தி கீதா மாதாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு  பிறந்த நாள் காணும் டாக்டர் சந்திரமோகனுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு புடவை வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் இந்த விழாவின் போது கர்நாடகா மாநில நுகர்வோர் சங்கத்தின் மாநில தலைவர் ஓம் சத்தி ஜெயபாலன், தஞ்சாவூரை சேர்ந்த நுகர்வோர் சங்கத்தின் மாநில செயலாளர் எம்.கே.முருகன், மாநில துணைச் செயலாளர்கள் டேவிட் முத்து குமரன், ஜெய்சன் மற்றும் டேனியல் சக்ரவர்த்தி, மாநில இணைச் செயலாளர் சையத் அஸ்கர், தேனி மாவட்டத் தலைவர் பாண்டியன், தேனி மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகா, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் திருமதி பாத்திமா, மாவட்ட துணைத் தலைவர் சத்தியராஜ், நுகர்வோர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சவுந்தராஜன், திருமதி ராதா, டைபிஸ்ட் நூருல்லா, மற்றும் நகர செயலாளர் சந்தோஷ், நுகர்வோர் சங்க நிர்வாகிகளான ஆகாஸ், தீனா, தமிழ், பிரகாஷ், சஞ்சு, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ