ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார் .!

தென்காசி

ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார் .!

ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார் 

தென்காசி, அக் - 06

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம், ஊத்துமலை  மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தங்களது குலத்தொழிலாக  விவசாயம்  செய்து வருகிறார்கள். இந்த விவசாய நிலத்தில் பக்கத்தில் இருக்கும் ஊத்துமலை வனப் பகுதியில் இருந்து காட்டுப் பன்றிகள்,  மான்கள், மிளா, கரடிகள், மயில்கள் போன்ற வன உயிரினங்கள் விவசாய நிலங்களில் புகுந்து முற்றிலுமாக  விவசாய பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகுவதோடு தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது.

இதனால் ஊத்துமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பிழைப்புக்கு வழி தேடி கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் சென்று கூலி வேலை செய்ய வேண்டிய சூழலை ஏற்படுகிறது. 

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு ஊத்துமலை பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகாத வகையில் மலை அடிவாரப் பகுதிகளில் சோலார் மின் வேலி அமைப்பதோடு, விளை நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். 

வனவிலங்குகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேதாஜி சுபாஷ் சேனையின் தலைவர் வழக்கறிஞர் வி.மகாராஜன், தலைமையில் நேதாஜி சுபாஷ் சேனையின்
தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் பசும்பொன் , மாநில வழக்கறிஞர் அணி தலைவர் கணேசன், புரட்சி பாரதம் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்சன், தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் எம் வி எஸ் வேல்முருகன் நேதாஜி சுபாஷ் சேனையின் இளைஞர் அணி செயலாளர் ராம்குமார்,  காளிராஜ் ஆகியோர் முன்னிலையில்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். 

அந்தக் கோரிக்கை மனுவினை படித்த மாவட்ட ஆட்சித் தலைவர் விரைவில் மாவட்ட வன அலுவலருடன் கலந்து பேசி ஊத்துமலை பகுதியில் உள்ள விவசாயிகளிடம்  கருத்துக்களைக் கேட்டு விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில்
ஆலங்குளம்  நேதாஜி சுபாஷ் சேனையின் ஒன்றிய செயலாளர் காளிராஜ், தென்காசி மாவட்ட இணை செயலாளர் கே.ஆனந்த் நேதாஜி சுபாஷ் சேனையின் தென் மண்டல இணைச் செயலாளர் பி. கதிர்வேல்,  மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் படித்துரை, லட்சுமணன்,  செல்லச்சாமி,  கனித்துரை, முத்துராஜ், முருகன், சரவணன், ராமசாமி அண்ணாமலை, முத்துக்குமார் திராவிட மணி மற்றும்  பெண்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்