மேலகரம் ஆடலி கலையக பயிற்சி மாணவர்கள் காசி விஸ்வநாதர் ஆலய கொலுவில் களிமண் பொம்மைகள் செய்து காட்சிக்கு வைத்தனர் .!

தென்காசி

மேலகரம் ஆடலி கலையக பயிற்சி மாணவர்கள் காசி விஸ்வநாதர் ஆலய கொலுவில் களிமண் பொம்மைகள் செய்து காட்சிக்கு வைத்தனர் .!

மேலகரம் ஆடலி கலையக பயிற்சி மாணவர்கள் காசி விஸ்வநாதர் ஆலய கொலுவில் களிமண் பொம்மைகள் செய்து காட்சிக்கு வைத்தனர்

தென்காசி அக் 01

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் ஆடலி கலையகம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஓவிய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஓவிய ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி, இயற்கை பொருட்களில் இருந்து இயற்கை வண்ணங்கள் தயாரித்தல், அதனை பயன்படுத்தி ஓவியங்கள் வரையவும், களிமண் பொம்மைகள் மற்றும் பயன்பாட்டு பொருட்கள் செய்தல், காகித கூழ் தயாரித்தல், அதனைக் கொண்டு பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், மற்றும் பயன்பாட்டு பொருள்கள் செய்யவும் கூழாங்கற்களை பயன்படுத்தி சிற்பங்கள் செய்யவும் விதைகள், இலைகள், சிரட்டை, சங்கு, சோவி மற்றும் ஓடுகள் போன்ற பல்வேறு இயற்கை பொருட்களை பயன்படுத்தி கலைப்பொருள்கள் செய்யவும், கற்றுக் கொடுக்கப்பட்டு
வருகின்றனர்.

குறிப்பாக மாணவர்கள் களிமண் பொம்மைகள் செய்வதில்  அதிகப்படியான ஆர்வமாக உள்ளனர்.
அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் கொலு நிகழ்வின் சிறு பகுதியில் ஆடலி ஓவிய வகுப்பு மாணவர்கள் குழுவினர் களிமண் பொம்மைகள், வனப்பகுதியில் ஆலமர நிழலில் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையில் மயங்கிய விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ள காட்சியினை களிமண் கற்கள் காகிதம் இயற்கை வண்ணங்கள் மற்றும் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தி செய்து காட்சிக்கு வைத்தனர்.

இந் நிகழ்ச்சியில் ஆடலி கலையக நிர்வாக இயக்குனர் ஆசிரியர் பார்வதி பாலா தலைமையில் நாவினி, தீப துர்கா, கிரிஷ்யுமித்ரன், விஷ்வா, ஹர்ஷித், தமிழ்ச்செல்வி,  தன்யஸ்ரீ, அட்சயா, நவீனா, மிர்திகா, தருன், அஃபஷின் உள்ளிட்ட மாணவர்கள் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


மாணவர்கள் காட்சிக்கு வைத்த களிமண் பொம்மைகளை பார்வையிட்ட பக்தர்கள், பொது மக்கள், கோவில் பணியாளர்கள்
வெகுவாக பாராட்டினர்.

செய்தியாளர்

AGM கணேசன்