கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ அலட்சியம் எனும் தலைப்பின் கீழ் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்துப் பட்டறை.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ அலட்சியம் எனும் தலைப்பின் கீழ் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்துப் பட்டறை.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ அலட்சியம் எனும் தலைப்பின் கீழ் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்துப் பட்டறை   நடைபெற்றது.

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில்  மருத்துவ அலட்சியம் என்கிற தலைப்பின் கீழ் கருத்துப் பட்டறை எனும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணி வரவேற்றார். நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து நீலகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து,  கருத்துபட்டறையில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினருக்கு  பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்  வழங்கினார்.

இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கி பேசிய நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பேசுகையில்....  

இந்த மருத்துவ அலட்சியம் கருத்துபட்டறையில் நலப்பணிகள் இணை இயக்குனர், மருந்து கட்டுப்பாடு அலுவலர்கள் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. இது போன்ற நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி ஆகியோருக்கு நுகர்வோர் சங்கங்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நுகர்வோர் விழிப்புணர்வு மருத்துவ அலட்சியம் கருத்து பட்டறையில் நுகர்வோர் சங்கங்களின்  பிரதநிதிகள் டேனியல் சக்ரவர்த்தி, சரளா,பிரேமலதா, கோபிநாத், ஜாய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ