ஓசூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் அதிமுகவில் இணைந்தனர்..!

கிருஷ்ணகிரி

ஓசூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் அதிமுகவில் இணைந்தனர்..!

கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்  முன்னாள் அமைச்சர் மற்றும்,பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில், பகுதி செயலாளர் ராஜு ஏற்பாட்டில், கவிதா தலைமையில் ஓசூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் அதிமுகவில் இணைந்தனர்.
 
பின்னர் அவர்கள் பேசும்போது..... 

பெண்கள் சமூக நலன், கல்வி, சுகாதாரம், பெண்கள் சுயநிறைவு போன்ற துறைகளில் அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் தங்களை ஈர்த்ததாக தெரிவித்தனர். அதிமுகவின் கொள்கைகள் மற்றும் மதிப்புகள் மீதான நம்பிக்கையால் தான் இவ்வளவு பெரிய அளவில் அதிமுகவில் சேர முடிவு செய்ததாக அவர்கள் கூறினர்.

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பேசும் போது அதிமுக எப்போதும் மக்களுக்காக செயல்படும் கட்சி. குறிப்பாக பெண்கள் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கும் ஒரே கட்சி அதிமுக தான். இன்றைய பெண்கள் இணைப்பு எங்கள் கட்சிக்கு புதிய வலுசேர்க்கையாகும்” என தெரிவித்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ