மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய ஒன்றிய அரசை கண்டித்து உண்ணாவிரதம் . !

கிருஷ்ணகிரி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய ஒன்றிய அரசை கண்டித்து உண்ணாவிரதம் . !

கிருஷ்ணகிரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயரை மாற்றிய மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதோடு திட்டத்துக்கான நிதியினை குறைத்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத போர்களை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப்  போராட்டத்திற்கு மாநிலத் தேர்தல் உறுப்பினர் சென்னப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக காங்கிரஸ் ஆட்சியின்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை கொண்டு வந்த இந்த  உன்னதமான இந்த சிறப்பு மிக்கத் திட்டத்தை மத்திய அரசு சீர்குலைக்கும் விதமாக மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி வி.பி.ஜி.ராம் ஜி என்ற பெயரை மாற்றி சட்ட ஏற்றிய மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

மேலும் மத்திய அரசைக்கண்டித்து நடத்தப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் வாயிலாக காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் பெயரை மாற்றியதோடு திட்டத்திற்கான நிதியினை குறைத்த மத்திய  அரசு 
உடனடியாக இந்த அடக்குமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் போக்கினை கண்டித்து நடத்தப்பட்ட இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ