கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர். !

கிருண்கிரி

கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர். !

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன், ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம், இ.ஆ.ப., உதவி தேர்தல் அலுவலர்கள் திருமதி.ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., ஷாஜஹான், திருமதி.கீதாராணி, பழனி, திருமதி.அபிநயா, சிவகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) செந்தில்குமார், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ