மாமரத் தண்டு துளைப்பான் கட்டுப்பாடு குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு.!
கிருஷ்ணகிரி
மாமரத் தண்டு துளைப்பான் கட்டுப்பாடு குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டாரத்தில் உள்ள பாலாறு வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் ம. நிஷா
மா. மகி, மு.மோனிஷா, டி.சி.நந்தினி, சு. பா. நந்திதாஶ்ரீ, சி.பத்மவர்ஷினி, ர.ரம்யா, ச. ரோஷினி, ச.ரஷிகா உள்ளிட்ட மாணவிகள், தங்களின் RAWE (Rural Agricultural Work Experience) பயிற்சியின் ஒரு பகுதியாக லத்தேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு மாமரத் தண்டு துளைப்பான் கட்டுப்பாட்டிற்கான மேலாண்மை முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில் பூச்சியின் தாக்கம், அதன் அடையாளங்கள் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து மா சாகுபடி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகள் மாமரத்தில் விளைச்சலை பாதுகாப்பதற்கான பயனுள்ள தகவல்களை பெற்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
