சாமனபள்ளி பகுதியை சேர்ந்த மூர்த்தி காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில செயலாளராக அந்ததுறையின் மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன்குமாரால் நியமிக்கப்பட்டார்.!

கிருஷ்ணகிரி

சாமனபள்ளி பகுதியை சேர்ந்த மூர்த்தி காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில செயலாளராக அந்ததுறையின் மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன்குமாரால் நியமிக்கப்பட்டார்.!

சாமனபள்ளி பகுதியை சேர்ந்த மூர்த்தி காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில செயலாளராக அந்ததுறையின் மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன்குமாரால் நியமிக்கப்பட்டார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, பிரிவு மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் அவர்களால்  கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட சாமனப்பள்ளி கிராமத்தை சேர்த்த  மூர்த்தி என்பவரை காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதியதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி .பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாமனப்பள்ளி மூர்த்தி தன்னை எஸ்.பி.பிரிவு மாநில செயலாளராக நியமனம் செய்த எம்.பி. ரஞ்சன்குமார் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இதே போல அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத், அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் செல்லக்குமார், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மனோகரன், முன்னாள் மாவட்டத் தலைவர்களான ராமமூர்த்தி, எல். சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களான எம்.சி.ரகு, ஹிரிஸ் பாபு ஓசூர் மாநகராட்சி தலைவர் தியகராஜன் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.