மேல்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் எருது விடும் விழாவில் 250 எருதுகள் பங்கேற்பு.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் எருது விடும் விழாவில் 250 எருதுகள்
பங்கேற்பு. குறிப்பிட்ட தூரத்தினை கடந்த எருதுகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பட்டி கிராமத்தில் ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது.

இந்த எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, சூளகிரி, இராயக்கோட்டை, பர்கூர், அத்திவாடி, ஓசூர் மட்டுமின்றி திருப்பத்தூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, தர்மபுரி, ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 க்கு மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டது.
அரசின் வழிக்காட்டுதலின் படி அனைத்து எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில்100 மீட்டர் தூரத்தைமிக குறைந்த நேரத்தில் விரைவாக ஓடிய எருதுகளைஇளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள். பின்னர் வெற்றி பெற்ற எருதுகளுக்கு முதல் பரிசாக 1 லட்சமும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரமும் நான்காம் பரிசாக ரூ.30 ஆயிரம் என 105 பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு எருது விடும் விழாவினை உற்சாகமாகக் கண்டுகளித்தனர். இந்த எருது விடும் விழாவிற்கான ஏற்படுகளை மேல்பட்டி கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
