பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.!

கிருஷ்ணகிரியில் பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரா கோயில் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் நகர சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சக்திகேந்திரா சக்திவேல் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.கவியரசு, அதிமுக நகர கழக செயலாளர் பி.என்.ஏ கேசவன், பாஜக நகர தலைவி விமலா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தின் போது தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கென எந்த திட்டமும் செயல்படுத்தப்படாமல் போதை கலாச்சாரத்தினை கட்டவிழ்த்து விட்டதுதான் தமிழக அரசின் சாதனையாக உள்ளது. 

ஆகையால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக்கூட்டணி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறிதிகளை  எடுத்துகூறி, மக்களிடம் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கினை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாலே தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்பார். ஆகையால் நீங்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றிப்பெறச்செய்ய வேண்டும் என்று தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில் வழியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் நகர சக்தி கேந்திர பொறுப்பாளர் லோகேஷ்குமார், சட்டமன்ற சக்தி கேந்திர பொறுப்பாளர் கார்த்திகேயன், மற்றும் வேணு, செல்வம், அறிவுலகமேதை, சோசியல் மீடியா மணிகண்டன், தேன்மொழி, அதிமுக ஐடி வின் வேலன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி நகர செயலாளர் ராஜ்குமார், நகர மாணவரணி செயலாளர் அருண், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் கோகுலகண்ணன், 26 வது வட்டச் செயலாளர் ரமேஷ், உள்ளிட்ட பாஜக, அதிமுக மாநில, மாவட்ட, நகர, மண்டல் நிர்வாகிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ