பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சி, திப்பனப்பள்ளி கிராமத்தில் பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 1.5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022 - 2025 ஆம் ஆண்டு வரை பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் கீழ், 2,105.80 எக்டர் பரப்பளவில் 5,04,630 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டில் 300 எக்டர் பரப்பளவில் 1,50,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
உடன் வன அலுவலர் பகான் ஜகதீஷ் சுதாகர் இ.வ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி கவிதா, சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ