பூல்தேவர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர். !
தென்காசி

தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமியின் இலத்தூர் இல்லத்திற்கு வருகை தந்து அவரது தகப்பனார் பூல்தேவர் மறைந்ததையொட்டி அன்னாரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந் நிகழ்வில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஷெரீப், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் யூ எஸ் டி சீனிவாசன், மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் டிஆர் கிருஷ்ணராஜா மற்றும் குடும்பத்தினர், கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள், பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்