ஓம் ஶ்ரீ சுயம்பு மஹாசக்திஸ்ரீ சாந்த காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக நிறைவு நாள் விழா. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள பில்லனகும்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் ஶ்ரீ சுயம்பு மஹாசக்திஸ்ரீ சாந்த காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக நிறைவு நாளினை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள்நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பில்லனகும்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் ஶ்ரீ சுயம்பு மஹாசக்திஸ்ரீ சாந்த காளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மூன்றாம் ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி வருடாந்திர நிறைவு விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு அடைந்ததை அடுத்து ஓம் ஶ்ரீ சுயம்பு மஹாசக்தி ஸ்ரீ சாந்த காளியம்மனுக்கு சிறப்பு யாக காலபூஜைகள் நடைபெற்றது,
புண்ணிய நதியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது மேளத்தாளங்களுடன் திருக்கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் யாக சாலை பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பாலன் சுவாமிகள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு மங்கள வாத்தியத்துடன்
கணபதி ஹோமத்துடன் பூஜைகளுடன் யாகபூஜைகள் துவங்கியது.
இந்த யாக பூஜையின் போது கலச பூஜைகள், வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம் பூரணாஹீதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகளை சிவாச்சாரியர்கள் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து புதியதாக திருக்கோவிலில் ஸ்ரீ நாகம்மாளுக்கு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டு தாலாட்டுடன் கற்பூர தீபாராதனைகள் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த ஓம் ஶ்ரீகயம்பு மஹாசக்தி ஸ்ரீ சாந்த காளியம்மனை ஏராளமான மக்கள் தரிசனம் செய்து உலக மக்கள் யாவரும் நலமுடன் வாழ வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும் வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ