மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் வயிற்றில் அடித்தவாறு நாய்களை பிடிக்க வலியுறுத்தி ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவினைக் கொடுத்தனர் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரத்த வெறியுடன் அலையும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் வயிற்றில் அடித்தவாறு நாய்களை பிடிக்க வலியுறுத்தி ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவினைக் கொடுத்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், கிருஷ்ணகிரி என மாவட்டம் முழுவதும் தெருநாய்கள் தொல்லையால் தெருக்களில் சுதந்திரமாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே கேள்விக்குறியாக உள்ள நிலையில் இது வரை கடந்த சில மாதங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கடிபட்ட நிலையில் 10 -க்கும் மேற்பட்டவர்கள் பலியான சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தெருக்களில் ரத்தவெறியுடன் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்திட வலியுறுத்தி தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத்தலைவர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் கவியரசு மற்றும் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் முனிராஜ் உள்ளிட்ட பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபுவிடம் நாய் கடியால் குழந்தைகள் இறப்பதை தடுத்திட வேண்டி, வயிற்றில் அடித்தவாறு கோரிக்கை மனுவினைக் கொடுத்த சம்பவம் சிறிது நேரம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இது குறித்து பேசிய மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் .....
நாய்களின் தொல்லையால் சாலைகளில் தனியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தனியாக செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாராக இருந்தாலும் இந்த நாய்கள் விடுவது இல்லை. கடித்து குதறுவதேடு கை, கால்களை கடித்து தின்னும் நிலையும் அதிகரித்து உள்ளது.
ஆகையால் இந்த நாய்களை கட்டுப்படுத்திட வலியுறுத்தி கிருஷ்ணகிரி நகராட்சிஆணையாளர் ஸ்டாலின் பாபுவை சந்தித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே நாய்களை பிடிக்க வலியுறுத்தி நாய் போல தவழ்ந்து வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. ஆகையால் நாய் கடியால் யாரும் பாதிக்கப்பட கூடாது என வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ள நாய்களை பிடிக்க வில்லை என்றால் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாய்களை கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று குறிப்பிட்டார்.
செய்தியாளர்
மாருதி மனோ