திருமலையப்ப புரத்தில் இலவச சட்ட பயிற்சி வகுப்பு .!

தென்காசி

திருமலையப்ப புரத்தில் இலவச சட்ட பயிற்சி வகுப்பு .!

திருமலையப்ப புரத்தில் இலவச சட்ட பயிற்சி வகுப்பு

 தென்காசி, செப் -22

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள திருமலையப்ப புரத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் -2005 ன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்புக்கு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கமலையன் தலைமை வகித்தார் . 
சங்கரன்கோவில் சபரி முன்னிலை வகித்தார் .
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பயிற்சியாளர் ஹக்கீம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினார்.

இந்த பயிற்சி வகுப்பில் தகவல் பெறும் உரிமைச் சட்ட வரலாறு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் விளக்கம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் துறை வாரியாக எப்படி மனு எழுதுவது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மேல் முறையீடுகளை எப்படி செய்வது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஒரு அரசு அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை/கோப்புகளை எவ்வாறு கள ஆய்வு செய்வது,மத்திய, மாநில தகவல் ஆணையங்களுக்கு எவ்வாறு மேல்முறையீடு செய்வது,
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தினை எவ்வாறு இந்திய குடிமகன் கையாளுவது,
போன்ற தலைப்புகளில்  பல்வேறு விளக்கங்களை எடுத்துரைத்தார் .

இந் நிகழ்ச்சியில் ஞானசேகர் 2 ஜே கள ஆய்வு பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறினார்.
கல்லிடை முனைவர் மகாராஜன் வாழ்த்துரை வழங்கினார்.  
முன்னதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை சிறப்பாக பயன்
படுத்தியவர்களுக்கு விருது வழங்கப் பட்டது.

இந்த பயிற்சி வகுப்பை தமிழ்நாடு விவேகானந்தா சேவை அறக்கட்டளை ஏற்பாடு செய்தது. முடிவில் தமிழ்நாடு விவேகானந்தா சேவை அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் நாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த பயிற்சி வகுப்பில் பாப்பான்குளம்  கதிரவன் , பா.ஜ.க ஆன்மிகம் கோவில் மேம்பாட்டு மாநில செயலாளர் சங்கர சுப்பிரமணியன், முப்பிடாதி மற்றும் 150க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

செய்தியாளர்

AGM கணேசன்