கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற 50வது ஆண்டு பொன்விழா .!

தென்காசி

கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற 50வது ஆண்டு பொன்விழா .!

கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற 50வது ஆண்டு பொன்விழா

தென்காசி செப் 22

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற ஐம்பதாவது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி கீழப்பாவூர் நாடார் அம்மன் கோவில் மைதானத்தில் வைத்து நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன் தலைமை வகித்தார். விழா தலைவராக செந்தில் செல்வம் கலந்து கொண்டார்.

ராமரத்தினசாமி, மதியழகன், கிருஷ்ணசாமி, சுரேஷ், கதிரேசன், சுரேஷ்முருகன்,
 வி கே கணபதி, குமரேசன், ராமசாமி, செளந்தர பாண்டியன், தங்கேஸ்வரன், துரை என்ற சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜன் வரவேற்புரை ஆற்றினார்.

தங்க சேட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். தங்கசாமி தொடக்க உரை ஆற்றினார். ராமச்சந்திர பாண்டி ஆண்டறிக்கை வாசித்தார். கே ஆர் பால் துரை, பொன் அறிவழகன், அருள் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துரைராஜ், சுப்பிரமணியன், பொன் கணேசன், முருகேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில்  திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்க தலைவர் ஆர் கே காளிதாசன், மீரான் மருத்துவமனை மருத்துவர் அப்துல் அஜீஸ், கீழப்பாவூர் பி எம் மருத்துவமனை மருத்துவர் ராதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக ரமேஷ்ராஜா, திலகராஜ், வைகுண்டராஜ், பிச்சையா, இசக்கி, பெரியசாமி, முத்தையா, ராமசாமி, முருகன், ஆவுடையப்பன், காந்தி, வடிவேல், மாயாண்டி, ராசேந்திரன், சண்முகவேல், கமல் சீனிராஜா, குத்தாலிங்கம், சுடர் ஒளிவு, ஆவுடையப்பன், ரஞ்சித், சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் சன் டிவி புகழ் ராஜாவின் நம் குடும்பங்களை பயமுறுத்துவது பாசப் பற்றாக் குறையா? பண பற்றாக் குறையா? என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில்தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்