காங்கிரஸ் கிராம கமிட்டி பொறுப்பாளர் அக.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் பலர் இணைந்தனர்..!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கிராம கமிட்டி பொறுப்பாளர் அக.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் பலர் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வெள்ளிச்சந்தைப் பகுதியை சேர்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிராம கமிட்டியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளருமான அக.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்சியில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாட்டின் மூலமாக ஈர்க்கப்பட்டு வெள்ளிசந்தை பகுதியை சேர்ந்த கேசவன், வெங்கடேசன், தீபக், நாகராஜ், தர்ஷன், குமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியை தங்கள் பகுதியில் வலுப்படுத்திட வேண்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களை பாராட்டி காங்கிரஸ் கட்சியின்
கிராம கமிட்டியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் அக.கிருஷ்ணமூர்த்தி பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை மக்கள் மத்தியில் எடுத்து கூறி இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தினை வலுப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்,
மேலும் வெள்ளிசந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு செய்த திட்டங்களை எடுத்துக் கூறி இன்னும் அதிக அளவில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
செய்தியாளர்
மாருதி மனோ