தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

தென்காசி

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி அக் 13

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கவாய் யை தாக்க முயன்ற ராகேஷ் கிஷோரை கண்டித்தும், தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜான்தாமஸ் பொருளாளர் சுப்பிரமணியன் நாடாளுமன்ற செயலாளர் வர்க்கீஸ் மாநில துணைச் செயலாளர்கள் ஆசிக் உசேன், மோசஸ், மாவட்ட அமைப்பாளர் பீர்முகமது என்ற தமிழ்ச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு கண்டன பேருரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் முரசு தமிழப்பன் சித்திக் தமிழ் குட்டி குழந்தை வள்ளுவன் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட நிர்வாகிகள் ரீகன் குமார், வெற்றிச்செல்வி, கார்த்திக், பாக்கியராஜ், துர்க்காதேவி, ராஜா,  சாமிதுரை, இசக்கி பாண்டியன், பாலகிருஷ்ணன், பீர் மைதீன், சையது இப்ராஹிம், ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்