ஷேக் முகமதுவின் தமிழ் திசை நாளிதழ் வெளியீட்டு விழா .!

மும்பை

ஷேக் முகமதுவின் தமிழ் திசை நாளிதழ் வெளியீட்டு விழா .!

ஷேக் முகமதுவின் தமிழ் திசை நாளிதழ் வெளியீட்டு விழா மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனாவில் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின், தேசிய குழு உறுப்பினர் எம்.டி. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் "தமிழ் திசை " முதல் பிரதியை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார், " வெகுஜன மக்களின் நம்பிக்கை நாயகர் " பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் பேரன் பாலா சாகேப் பிரகாஷ் அம்பேத்கர் வெளியிட, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் பெற்றுக் கொண்டு சிறப்புரை வழங்கினார்.

முன்னதாக, "தமிழ் திசை" நாளிதழின் முதன்மை ஆசிரியர் கவிஞர் மு.இஸ்மாயில் இன்முகில் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

பூனா பத்திரிகையாளர் நிலேஷ் சவான் தொகுத்து வழங்கினார்.

இங்கிலாந்து - பொருளாதார நிபுணர் உயர்திரு இராகுல்ஜி கெய்க்வாட், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் தோழர் காயல் அகமது சாகிபு, தோழர் அபி ராவணன், வழக்கறிஞர் பிரதர்ஷன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ் திசை " நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் திரு ஷேக் முகமத் அவர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தார்.

இதில் மகாராஷ்டிரா மாநில பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ