வேப்பனஹள்ளியில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம். !

கிருஷ்ணகிரி

வேப்பனஹள்ளியில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம். !

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காந்தியின் பெயரை மீண்டும் சூட்டும் வரை இந்த போராட்டம் ஓயாது என கண்டனம் தெரிவித்து கோசங்களை எழுப்பினர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வேப்பனஹள்ளியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஏழை எளிய மக்களின் பசியை போக்கிடும் வகையில் மகாத்மா காந்தியின் பெயரில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை சிதைக்கின்ற வகையில் காந்தியின் பெயரை நீக்கி விட்டு வி.ஜி.பி. ராம்ஜி என்று மாற்றிய மத்திய அரசினைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹரிஸ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில செயலாளர் மூர்த்தி, வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர்கள் முனிராஜ், முருகன், பைரேஷன், வாசு,நஹிமுல்லா,  டைகர் பிரவீன், வெங்கடாஜலபதி சுந்தர்ராஜ்  ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக வேப்பனஹள்ளி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திரு உருவச் சிலைக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றி வி.ஜி.பி. ராம்ஜி என்று பெயரை மாற்றி 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கின்ற மத்திய அரசின் போக்கினை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் இந்த முற்றுகைப் போரட்டத்தின் வாயிலாக மத்திய அரசு 100 நாள் வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், மீண்டும் அவரது பெயரை 100 நாள் வேலை திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து பேசிய மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஸ்பாபு ......
காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட உன்னதமான 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு காந்தியின் பெயரை நீக்கி விட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த வி.ஜி.பி. ராம்ஜி என்பவரின் பெயரை மாற்றியதை ஒருபோதும் என்றுக்கொள்ள முடியாது 100 நாள் திட்டத்தில் காந்தியின் பெயரை மீண்டும் சூட்டும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டனர்.
அப்போது வட்டார தலைவர் முனியப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முருகன், சசி, ராமண்ணா, பாலசுப்பிரமணி, பரமசிவன், நாகப்பன், சக்திவேல், இப்ராஹிம், பெரியண்ணன், சின்னத்தம்பி, மாது மெக்கானிக், சதிஷ், முபாரக் பாஷா, அன்பு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ