300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பால்குடங்களுடன் வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் ஆடிப்பூரத் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது,
கடந்த மாதம் இறுதியில் கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் ஆடிப்பூரத் திருவிழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளும், கற்பூரத் தீபாராதனைகள் மட்டுமின்றி அம்மனுக்கு பொங்கலிட்டு படையல் வைத்தும் பல்வேறு பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய விழாவில் ஒன்றான மாபெரும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் கீழ் புதூர் காளியம்மன் திருக்கோவிலில் இருந்து துவங்கிய இந்த பால்குட ஊர்வலமானது மேல்புதூர் மாரியம்மன் திருக்கோவில், பெருமாள் நகர் முத்துமாரியம்மன் ஆகிய கிராம திருக்கோவில்கள் வழியாக வந்த பால்குடம் ஊர்வலமானது ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நிறைவடைந்தது.
இதனை அடுத்து திருக்கோவில் கருவறையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு பெண்கள் பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட பாலினை பெரிய மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
இந்த ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெரிய மாரியம்மனை ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்த ஆடிப்பூரத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கீழ்புதூர், மேல்புதூர். பெருமாள் நகர் ஆகிய மூன்று கிராம கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் மற்றும் கிராம மக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ