தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் கிளைச் சங்க துவக்க விழா.!

கிருஷ்ணகிரி

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் கிளைச் சங்க துவக்க விழா.!

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள ஏரி சின்ன கவுண்டனஹள்ளி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் கிளைச் சங்க துவக்க விழாவும் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின்  மாவட்ட பொதுச் செயலாளர் அனுமந்தராசு, நர்சரி உரிமையாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணையா, மாவட்டத் தலைவர் வரதராசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் இராமகவுண்டர் கலந்துக் கொண்டு தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை சங்கத்தினையும், சங்கத்தின் கொடியினையும் ஏற்றி வைத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இக்கூட்டத்தில் ஏரிசின்னகவுண்டனஹள்ளி முதல் தர்சாலை அமைத்து அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையையான ரேஷன்கடை அமைக்க வேண்டும், மழைநீர் செல்லும் ஏரி கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாம்பு கடித்து இறந்தவர்களுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்குது போல தமிழகத்திலும் பாம்பு கடித்து  இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும், வன விலங்குகளான யானை போன்ற வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகையை விரைவாக வழங்கிட வேண்டும், விவசாயிகளின் விலைப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலையும், ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதிக்கு தடை செய்ய மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தின் போது கிளை சங்க தலைவர் முருகேசன், துணைத் தலைவர் கோவிந்தராஜ், கிளை செயலாளர் கோவிந்தராஜ், மற்றும் விவசாய சங்கத்தினை சேர்ந்த முனிராஜ், மதி, ரவி, சரவண குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ