அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய பா.ஜ.க.போர்க்கொடி.!

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய பா.ஜ.க.போர்க்கொடி.!

டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் நடந்த விசாரணை சட்ட விரோதமானது என அறிவிக்கவும் அதிகாரிகளை விசாரணை எனும் பெயரில் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் தமிழக அரசு சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "டாஸ்மாக் மீதான சோதனையை அமலாக்கத்துறை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும் சட்டத்திற்குட்பட்டே இந்த சோதனைகள் நடைபெறுகின்றன என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

அமலாக்கத்துறை உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை, ஊழல் புரிந்தவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.