வால்பாறை  வேவர்லி எஸ்டேட்டில் கரடி தாக்கி 8 வயது சிறுவன் பலி.!

வால்பாறை

வால்பாறை  வேவர்லி எஸ்டேட்டில் கரடி தாக்கி 8 வயது சிறுவன் பலி.!

வால்பாறை  வேவர்லி எஸ்டேட்டில் கரடி தாக்கி 8 வயது சிறுவன் பலி.!

அஸ்ஸாம் ஒரிஷா போன்ற வட மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் இப்பகுதிகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளாக பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வட மாநில தொழிலாளியின் மகனான நூர் இஸ்லாம் இன்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இச்சிறுவனை கரடி தாக்கியதில் முகம் கை கால் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏறபட்டுள்ளது.

இதில் முகம் முற்றிலுமாக  சிதைந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

ஆரம்பத்தில் சிறுத்தை தாக்கியதாக செய்தி பரவிய நிலையில் பின் கரடி கடித்து சிறுவன் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.