பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க சௌதி பயணத்தை பாதியில் முடித்து விட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.!

காஷ்மீர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க சௌதி பயணத்தை பாதியில் முடித்து விட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.!

ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி தனது சௌதி பயணத்தை பாதியிலே விட்டு விட்டு நாடு திரும்பியுள்ளார்.

மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் பைசாரன் பள்ளத்தாக்கு உள்ளது. அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் "சிறிய ஸ்விட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.

இப்பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை கூடியிருந்தபோது, பைசாரன் மலையிலிருந்து புல்வெளி பகுதிக்குள் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதலை நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இக்கொடூர தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட "லஷ்கர்-ஏ-தொய்பா' பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது.

அரசுமுறை பயணமாக செளதி அரேபிய சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு புதன்கிழமை காலை தில்லி வந்தடைந்தார்.

மேலும், டெல்லி வந்தவுடன் விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவசர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஒரு தீவிரவாத தாக்குதல் மீண்டும் நடக்காத அளவிற்கு விரைவில் பதிலடி கொடுக்கவே இந்த ஆலோசனை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.