தவெக மகளிர் அணி சார்பில் நடைப்பெற்ற உலக மகளீர் தின விழா.!

கிருஷ்ணகிரி

தவெக மகளிர் அணி சார்பில் நடைப்பெற்ற உலக மகளீர் தின விழா.!

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக மகளிர் அணி சார்பில் நடைப்பெற்ற உலக மகளீர் தின விழாவினையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் ஆலோசனைப்படி, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பாக மகளிர் மட்டுமே கலந்துக் கொண்ட  விளையாட்டு போட்டிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது

வேப்பனஹள்ளியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு த வெ க மகளிர் அணியை சேர்ந்த திருமதி இந்திரா நாகராஜன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவில் மாவட்ட இணை அமைப்பாளர் நேத்ராவதி, ஒன்றிய அமைப்பாளர் தனலட்சுமி, நித்யா, தவமணி, மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நாகராஜன், அம்ரிஷ், ஜெகதீஷ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருள், வர்த்தக அணி கார்த்திக் சரவணன், தீபக், சிவா, ஜெய், பார்த்திபன், ஒன்றிய கழக நிர்வாகிகள் விஜயகுமார், மணி, வாசு, பாபு, முருகேசன், ஸ்ரீ ராமுலு, நரசிம்மன், ஸ்ரீ ராகவன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ