முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.!
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டினத்தில் நடைப்பெற்ற முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகில் உள்ள தாசம்பட்டியில் டான் குருப்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் போட்டியில் கிருஷ்ணகிரி, ஒசூர், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 24 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இன்று துவங்கிய இந்த கிரிக்கெட் போட்டியை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும்,மிட்டஹள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான எல்.சுப்பிரமணியன் மற்றும் காவேரிப்பட்டினம் பேருராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நாக்கவுண்ட் முறையில் நடைப்பெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு கேடயம் மற்றும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
