கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் எத்தனை மோடிக்கள், அம்ஷாக்கள் வந்தாலும் 210 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் முதல்வர் நாற்காலில் உட்காருவார் மகளிர் உரிமை தொகை ரூ.2000 வழங்குவார் என திமு கழக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய அருகில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், நகர திமுக செயலாளர்களான அஸ்லாம், வேலுமணி, பொதுக்குழு உறுப்பினர் அஞ்சூர் நாகராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்,

மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்,
அப்போது தனது சிறப்புரையில்.......
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் உலகமே போற்றும் வகையில் என்னென்ன திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார், தமிழகத்தில் கொண்டு வந்துள்ள திட்டங்களை மற்ற மாநிலங்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்படுத்தி இருக்கிறது.
தவெக தலைவர் விஜய் 15 நாட்களுக்கு ஒரு முறை வந்து பொதுக்கூட்டத்தில் சில மணித்துளிகள் பேசி விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று விடுவார் என்பதால் நடிகர் விஜய்யை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் கூடுற கூட்டமே தவிர அவரை வெற்றிப்பெறச் செய்யும் கூட்டம் இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கும் மோடிக்கும் இடையிலான போட்டி இதில் எத்தனை மோடிக்களும் அமித்ஷாக்கள் வந்தாலும் 210 இடங்களில் திமுக கூட்டணி கட்சி வெற்றிபெற்று
இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் உட்காருவார், உடனே மகளிருக்கான மகளீர் உரிமை தொகை ரூ.2000 வழங்குவார் என்று கழக கொள்கைப்பரப்பு செயலாளர் சபாபதி மோகன் குறிப்பிட்டார்
இந்த பரப்புரை கூட்டத்தின் போது ஒன்றிய செயலாளர் நாராயணன், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
