தளி தொகுதியில் ஐஸ் விற்று அதிமுக சாதனைகளை விளக்கி பேசிய முன்னால் அமைச்சர்.!
கிருஷ்ணகிரி

தளி தொகுதியில் ஐஸ் விற்று அதிமுக சாதனைகளை விளக்கி பேசிய மாவட்ட பொருப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தளி ஒன்றியம், பென்னங்கூர், மாடக்கல் ஆகிய கிராமத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ் தலைமையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வராக செய்து காட்டிய திட்டங்கள் அடங்கிய பட்டியலை துண்டறிக்கையாக வழங்கப்பட்டது
அம்மா பேரவை மாநில துணை செயலாளர் மாவட்ட பொறுப்பாளர் மாண வி.பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி, ஆகியோர் துண்டறிக்கைகளை வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு வழங்கி அதிமுகவிற்கு ஆதரவு திரட்டினர்.
அப்போது மாவட்ட பொருப்பாளர், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பொதுமக்களுக்கு ஐஸ் விற்று அதிமுக சாதனைகளை விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஜாகிர் உசேன், ஓசூர் முன்னாள் நகர செயலாளர் நாராயணன், தேன்கனிக்கோட்டை கவுன்சிலர் பழனி, தளி முன்னாள் நகர செயலாளர் நாகேஷ் மற்றும் தளி தொகுதிக்குட்பட்ட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பூத் கமிட் நிர்வாகிகள் என கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ