கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையேல் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி..!

கிருஷ்ணகிரி

கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையேல் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி..!

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையேல் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலதலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை மிகவும் குண்டு குழியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அணுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில்   மாவட்ட ஆட்சியரிடம் கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கொடுத்தனர்.

இது குறித்து பேசிய கிராம மக்கள்...... 
மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராமத்தில் வசித்து வரும் எங்களுக்கு என முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டும் அதற்கான பணிகளும் நடைபெற்ற நிலையில் தீடீரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும் இல்லை. ஆகையால் கிடப்பில் போடப்பட சாலைப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையேல் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ