தென்காசி நகர் மன்ற அவசரக் கூட்டம்.!
தென்காசி

தென்காசி நகர் மன்ற அவசரக் கூட்டம்
தென்காசி செப் 29
தென்காசி நகர் மன்ற அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கே என் எல். சுப்பையா முன்னிலை வகித்தார். இதில் தென்காசி நகரின் குடிநீர் தேவைக்காக தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதல்வருக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவித்தனர்.
இதில் நகராட்சி இருபதாவது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் முகமது ரபிக் தென்காசி தினசரி சந்தை ஏல வைப்புத் தொகை மாற்றுத்திறனாளி
களுக்கு குறைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை வைத்தார்.
மேலும் குடிநீர் வாறுகால் தெரு விளக்கு மற்றும் ரோடு சம்பந்தமாக ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது வார்டு பிரச்சனைகள் குறித்து கூறினர்.இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் கார்த்திகா, சுமதி, முப்புடாதி, ரெஜினா, ஆஷிக் முபினா, பானு, மகேஸ்வரி, முருகன், ராமகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன்,
காதர் மைதீன், சுப்பிரமணியன், ரபீக், மஞ்சுளா, வசந்தி வெங்கடேஸ்வரன், அபூபக்கர், உமா மகேஸ்வரன், கல்பனா, ராமசுமதி, நாகூர் மீரான், சுல்தான் ஷெரீப், ராமசுப்பிரமணியன், குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 68 தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன.
செய்தியாளர்
AGM கணேசன்