டிரம்புக்கு எதிராக கருத்தடை மாத்திரைகளை வாங்கிக் குவிக்கும் பெண்கள்..!! அமெரிக்காவில் படுஜோர்

டிரம்புக்கு எதிராக கருத்தடை மாத்திரைகளை வாங்கிக் குவிக்கும் பெண்கள்..!! அமெரிக்காவில் படுஜோர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் 47-வது அதிபராக அடுத்தாண்டு தொடக்கத்தில் பதவியேற்க இருக்கிறார்.

இதற்கான பணிகளை அவர் ஆரம்பித்துள்ளார். முதற்கட்டமாக அவர் தனது கேபினட்டில் இருக்க போகும் அமைச்சர்களின் பெயர்களைத் தேர்வு செய்து வருகிறார். அதேநேரம் டிரம்ப் வென்றதில் இருந்தே அமெரிக்காவில் வினோத சம்பவங்கள் நடந்து வருகிறது.

ஒரு சில பெண்கள், டிரம்ப்பிற்கு அதிகளவில் வாக்களித்து வெல்ல வைத்த ஆண்களுடன் இனி உடலுறவு கொள்ள மாட்டோம் என போராட்டம் அறிவித்துள்ளனர். இன்னும் சில பெண்கள், டிரம்ப் வெல்லக் காரணமாக இருந்த ஆண்களை விஷம் வைத்துக் கொல்லப் போகிறோம் என்றும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே அங்குள்ள பெண்கள் திடீரென ஹார்மோன் கருத்தடைகள் மாத்திரைகள், கருக்கலைப்பு மருந்துகளை வாங்கி குவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, டிரம்ப் வென்றவுடன் மட்டும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனை வழக்கத்தை விட சுமார் 17 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்தத் தேர்தலில் கருக்கலைப்பு விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருந்தது. அந்நாட்டு உச்சநீதிமன்றம், கருக்கலைப்பு என்பது நாடு தழுவிய பெடரல் உரிமை இல்லை என்று கடந்த 2022இல் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக டிரம்ப்பின் குடியரசு கட்சி ஆட்சியில் இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டன.

டிரம்ப் காலத்தில் நாடு முழுக்க அவர் கருக்கலைப்பிற்குத் தடை விதிப்பார் என்று அங்குள்ள பெண்கள் பயப்படுகிறார்கள். இதன் காரணமாக அங்குள்ள பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை மொத்தமாக வாங்கி குவித்து வருகின்றனர். மேலும், கருக்கலைப்பு மற்றும் அதற்கான மாத்திரைகள் குறித்த தகவல்களைப் பகிரும் பிளான் சி இணையதளத்திற்கு வருவோரின் எண்ணிக்கையும் சுமார் 20 மடங்கு அதிகரித்துள்ளதாம். கருத்தடை மாத்திரைகள் மட்டுமின்றி, கருத்தடை சார்ந்த மற்ற பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.