இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து.. ஈரான் வசம் உள்ள ஏவுகணைகளின் லிஸ்ட்
தெஹ்ரான்: பாலஸ்தீனத்துடனான போரில், ஈரானை இஸ்ரேல் உள்ளே இழுத்திருக்கிறது. ஹமாஸ் என்பது ஆயுதம் ஏந்திய சிறு குழு.
இந்த குழுவை தோற்கடிக்கவே இஸ்ரேலுக்கு ஓராண்டுக்காலம் ஆகிவிட்டது. இப்படி இருக்கையில் ஈரானை எப்படி சமாளிக்கப்போகிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இச்சூழலில்தான் ஈரானின் ஆயுத பலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போது நடந்து வரும் போரின் தொடக்கம் குறித்து சில விஷயங்களை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியதுள்ளது. அப்போதுதான் ஈரான் யார்? இஸ்ரேல் யார் என்று புரியும். ஈரான் மத்திய கிழக்கின் மிகவும் சக்தி வாய்ந்த நாடு. ஈரான் உருவாக்கிவிட்ட அமைப்புதான் ஹிஸ்புல்லா. லெபனான் நாட்டின் அனைத்து கட்டுப்பாடுகளும் தற்போது ஹிஸ்புல்லா வசம்தான் இருக்கின்றது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை நடத்தியபோது, வெளியிலிருந்து அதன் மீது அட்டாக் செய்தது ஹிஸ்புல்லாதான். இது இஸ்ரேலுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருந்தது. கரம் வைத்துக்கொண்ட இஸ்ரேல், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தி, ஹிஸ்புல்லாவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. எல்லாம் ஓகேதான், ஆனால் ஹிஸ்புல்லா தலைவர்களை போட்டு தள்ள தேர்ந்தெடுத்த இடம்தான் தவறானது. ஹிஸ்புல்லா தலைவர்கள் லெபனான் தலைநகரில் இருக்கும்போது கொல்லப்பட்டிருக்கிறார்கள். லெபனான் என்பது ஈரானின் நட்பு நாடு! அவ்வளவுதான் முடிஞ்சது!
இந்த புள்ளியில்தான் ஈரான் உள்ளே நுழைகிறது. நட்பு நாடை தாக்கியதற்காக ஏராளமான ஏவுகணை இஸ்ரேல் மீது ஈரான் ஏவ, பதிலுக்கு இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இப்போது ஈரானின் டர்ன். ஈரான் என்ன செய்யப்போகிறதோ? என்று மத்திய கிழக்கு நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றன. இதில் இஸ்ரேலுக்கு கிலியை ஏற்படுத்தும் வகையில், ஈரான் வசம் உள்ள ஏவுகணைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிய செய்தி நிறுவனமான ISNA கடந்த ஏப்ரல் மாதம் இந்த விவரங்களை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஈரான் வசம் சக்தி வாய்ந்த 9 வகையான ஏவுகணைகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது 'செஜ்ஜில்' ஏவுகணைதான். இது மணிக்கு 17,000 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. 2,500 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை இது மிக துல்லியமாக தாக்கும்.
அடுத்ததாக 'கெய்பர்' வகை ஏவுகணை. இது 2,000 கிமீ தூரம் வரை செல்லக்கூடியது. மூன்றாவதாக 'ஹஜ் காசிம்' ஏவுகணை இருக்கிறது. இது 1,400 கிமீ தூரம் வரை செல்லக்கூடியது. அடுத்தடுத்த பட்டியலில் 'ஷாஹாப்-1' (300 கிமீ தூரம்), ஜால்ஃபஹார் (700 கி.மீ தூரம்), 'ஷாஹாப்-3' (800-1000 கிமீ தூரம்), 'எமாட் 1' (2,000 கிமீ தூரம்) ஆகிய ஏவுகணைகள் இடம் பிடித்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி, ஒலியை விட வேகமாக வரும் ஏவுகணைகளை டீல் செய்யும் அளவுக்கு இஸ்ரேலிடம் வான் பாதுகாப்பு அமைப்பு கிடையாது. எனவே, ஈரானிடம் இஸ்ரேல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது