கத்தார் மஜக சார்பில் நடைபெற்ற கத்தார் ம ஜ க 10 ஆம் ஆண்டு துவக்கம் மற்றும்இந்திய மீனவர்களுக்கான நிகழ்ச்சி
கத்தார்

மஜகவின் பத்தாம் ஆண்டு துவக்கம்
கத்தார் மஜக சார்பில் நடைபெற்ற இந்திய மீனவர்களுக்கான நிகழ்ச்சி
பிப்ரவரி:22,,
மனிதநேய ஜனநாயக கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மஜக வளைகுடா பிரிவின் ஒன்றான கத்தார் மஜக சார்பில் கத்தார் வாழ் இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கத்தார் மஜகவின் மண்டல செயலாளர் பரங்கிப்பேட்டை அப்துல் ரஜ்ஜாக் தலைமையில் நேற்று மாலை அல் வக்ரா பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மஜகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் கத்தார் மஜகவின் மேலிட பொறுப்பாளர் உத்தமபாளையம் உவைஸ் முன்னிலை வகித்தார்.
மண்டல பொருளாளர் கருப்பூர் உபைஸ் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக YAFA CARGO வின் மேலாளர்கள் சேக் மைதீன், அப்துல்லாஹ், கத்தார் மகிழ்வரங்கத்தின் தலைவர் வரதராஜன், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலச்சங்க தலைவர் குரும்பூர் தாஹிர் ஆகியோர் வக்ரா பகுதி மீனவ பிரதிநிகள் பாலா, ஜெட்லீ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டணர்.
மேலும் மண்டல துணைச் செயலாளர்கள் அப்துர் ரஹ்மான், விநாயக மூர்த்தி, முன்னால் நிர்வாகிகள் திருப்பத்தூர் நிசார் அஹ்மது, திருச்சி நஜிர் பாட்ஷா, சிதம்பரம் நூர் முஹம்மது மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக மண்டல தொழிலாளர் அணி செயலாளர் ஆயங்குடி ஷாஜகான் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைசெய்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )