மத்திய அரசு கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கினால்தான் கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும் என முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை பேச்சு.!
திருப்பத்தூர்

மத்திய அரசு கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கினால்தான் கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும் என முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை பேச்சு
திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் பகுதியில் வேளாங்கண்ணி என்ற தனியார் பள்ளி வருகிறது. இந்தப் பள்ளியின் ஆண்டு விழா முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய அவர் மத்திய அரசு கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் உள்ளது. அந்த நிதியை வழங்கினால் தான் அனைத்து அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் கட்டிட வசதிகள் என அனைத்தையும் மேம்படுத்த முடியும் என்றும் கூறினார். ஒரு நாட்டின் முக்கிய வளர்ச்சிக்கு கல்விதான் மிக முக்கியமானதாகும். தலைசிறந்த விஞ்ஞானிகளையும் மருத்துவர்களையும் தமிழ்நாடு உருவாக்கி வருகிறது.
நான் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றியவன் அதனால் தான் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து தான் பல கல்லூரிகளையும், பள்ளிகளையும் துவங்கி இருக்கிறேன். சிறந்த தரமான கல்வியை தொடர்ந்து வழங்கி ஒரு சேவையாக செய்து வருகிறேன் என்றும் தெரிவித்தார்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள், பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என திரளாக பங்கேற்றனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
செய்தியாளர்
ந.வெங்கடேசன்