வாலாஜாபேட்டை அருகே அரசு கல்லுரி மாணவிகள் நாட்டு நலப்பணிகள் முகாம்.!

வாலாஜா

வாலாஜாபேட்டை அருகே அரசு கல்லுரி மாணவிகள் நாட்டு நலப்பணிகள் முகாம்.!

வாலாஜாபேட்டை அருகே அரசு கல்லுரி மாணவிகள் நாட்டு நலப்பணிகள் முகாமில் கலந்து கொண்டு கிராம பொதுமக்களிடையே சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த  கல்லூரியில் பயிலும் மாணவிகள் 300-க்கும் மேற்பட்ட (NSS) நாட்டு நலப்பணிகள் திட்டத்தின் முகாம் மூலமாக வாலாஜாபேட்டை அடுத்த அம்மணந்தாங்கல் கிராமத்தில் 7 நாட்கள் தங்கி இருந்து சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பராமரிப்பு குறித்து கிராம பொதுமக்களிடையே நாட்டு நலப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் முன்னதாக நடந்த விழாவிற்கு அரசு கல்லூரி முதல்வர் பூங்குழலி தலைமை தாங்கினார் கல்லூரி பேராசிரியர் முனைவர் கவிதா திட்ட விளக்குரையாற்றினார் இதில் வேலூர் DKM கல்லூரியின் பேராசிரியை முனைவர் தாமரைச்செல்வி மற்றும் ராணிப்பேட்டை ஜிகே உலகப்பள்ளி இயக்குனர் வினோத் காந்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களிடையே பல்வேறு அறிவுரைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் இந்த பணியில், விவசாயம், சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவிகள் கிராமத்தில் உள்ள  பொதுமக்களிடையே விழிப்புணர்வை தினந்தோறும் ஏற்படுத்தி வருகின்றனர் மேலும் கிராமத்தில் பொது மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் அனைவரும் அவர்களுடைய உடல் நிலைகளை சோதனை செய்து செல்கின்றனர் மேலும் வருகின்ற 24ஆம் தேதி வரை நடைபெற்று நாட்டு நலப்பணி முகாமில் கிராமத்தில் பொது மக்களிடையே சமுதாயப் பணிகள் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் பாராட்டுகளை தெரிவிக்க உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது மேலும் முகாமில் இளைஞர்கள் முன்னேற்றத்தை முக்கிய குறிக்கோளாக கொண்டு வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் உலகளாவிய மாணவர்கள் கூட்டமைப்பு இந்திய செயல் திட்டம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு வரும் நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலமாக மாணவிகளுக்கு தலைமை பண்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது..

இந்த முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் அமுதா, வளர்மதி, ஒன்றிய குழு பெருந்தலைவர் சேஷாவெங்கட், ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா சுதாகர், SPW தொண்டு நிறுவனத்தின் செயல் திட்ட அலுவலர் கார்த்திகேயன், தன்னார்வலர் மொஹமத் ஆசிம், உதவி பேராசிரியர் கணிதத்துறை செந்தமிழ், உதவி பேராசிரியர் ஆங்கிலத்துறை அலைசா 
தேமுதிக கட்சியின் மத்திய ஒன்றிய செயலாளரும் அம்மணந்தாங்கல் ஊராட்சி மன்ற உறுப்பினருமான பாண்டுரங்கன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அரசு அதிகாரிகள் மருத்துவத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

அருள் அரசன்