தவெக சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு நாள் அனுபவிக்கப்பட்டது

ராணிப்பேட்டை

தவெக சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு நாள் அனுபவிக்கப்பட்டது

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு நாள் அனுபவிக்கப்பட்டது

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் தவெக கட்சியின் கொள்கை தலைவராக விளங்கும் அஞ்சலை அம்மாள் திருவுருவப்படத்திற்கு பல்வேறு பூ மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் பூக்கடை மோகன் தலைமையில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட இணை செயலாளர் காந்திபிரசாத், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, சசிகலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலைவாணி, ராஜலட்சுமி, துர்காதேவி, அரவிந்த், லோகேஷ், முஹம்மத்யாசின், சிதம்பரம், திரவிநாதன், மூசா, ஆற்காடு நகரம் வினோத், வாலாஜா கிழக்கு ஒன்றியம்‌ தீனா, ராணிப்பேட்டை நகரம் சஞ்சய், வாலாஜா மேற்கு ஒன்றியம் மணிகண்டன், திமிரி ஒன்றியம் சதீஷ், கண்ணியம்பாடி ஒன்றியம் விஜயகுமார் உள்ளிட்ட நகர ஒன்றிய பேரூர் பிற அணி மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

செய்தியாளர்

அருள் அரசன்