மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் - அமைச்சர் MRK பன்னீர் செல்வம் அறிவுறுத்தல்.!

வடகிழக்கு பருவமழை

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் - அமைச்சர் MRK  பன்னீர் செல்வம் அறிவுறுத்தல்.!
வடகிழக்கு பருவமழை ஆய்க்கூட்டம்

6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம்.

தமிழகத்தில் தற்போது பெய்த மழை காரணமாக 2,25,655 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 45,634 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. 

மொத்தம் இதுநாள் வரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது- வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து, அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்களுடன் காணொலி வாயிலாக, ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் பி.முருகேஷ், இ.ஆ.ப, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி.குமரவேல் பாண்டியன், இ.ஆ.ப., தமிழ்நாடு வடிநீர்ப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் / மேலாண்மை இயக்குநர் ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (வே.பொ) ஆர்.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் சுலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பயிர் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியினை 17.12.2024க்குள் முடித்து, மாநில பேரிடர் நிவாரணத் தொகையினை விவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத் தரும் வகையில் உரிய கருத்துக்களை  அரசிற்கு விரைவில் அனுப்பப்பட வேண்டும். 

கணக்கீட்டின் போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.