"லாஸ்யா" கலாச்சார கூடத்தின் சார்பில்"ஒ மார்கழி" என்ற தலைப்பில் 15 நாட்கள் நடைபெறும் மார்கழி தின கொண்டாட்ட நிகழ்ச்சி

ஆண்மீகம்

"லாஸ்யா" கலாச்சார கூடத்தின் சார்பில்"ஒ மார்கழி" என்ற தலைப்பில் 15 நாட்கள் நடைபெறும் மார்கழி தின கொண்டாட்ட நிகழ்ச்சி

சென்னை துரைப்பாக்கத்தில் "லாஸ்யா" கலாச்சார கூடத்தின் சார்பில்"ஒ மார்கழி" என்ற தலைப்பில் 15 நாட்கள் நடைபெறும் மார்கழி தின கொண்டாட்ட நிகழ்ச்சி துவங்கியது

தொடக்க நிகழ்ச்சியாக பத்மஸ்ரீ பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுக்கு "லாஸ்யா சூடாமணி" என்ற விருது வழங்கி சிறப்பித்தது

சென்னை ஓ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மார்கழி மாத பண்டிகையை கொண்டாடும் வகையில் லாஸ்யா கலாச்சார கூடத்தின் சார்பில் "ஓ மார்கழி" என்ற தலைப்பில் பல்வேறு இசை கலைஞர்கள் பங்கு பெறும் மார்கழி தின கலாச்சார கொண்டாட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது 

டிசம்பர் 16 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 200 க்கும் மேற்பட்ட ஆடல்,பாடல், இசைக்கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி யும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்

அதன் தொடர்ச்சியாக பிரபல கர்நாடக இசை பாடகி பத்மஸ்ரீ பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுக்கு அவரது இசை வாழ்க்கையை போற்றும் வகையில் "லாஸ்யா சூடாமணி" என்ற விருதை வழங்கி ஒரு லட்சம் பணப்பரிசையும் வழங்கி கௌரவித்தனர் 

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை அழைத்து வர வாகன வசதியும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இசைக்கலைஞர்கள், கலாச்சார பிரியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.