31-ம் ஆண்டாக பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் - பக்தி பரவசத்துடன் கான வந்த பக்தர்கள்.!

ஆண்மிகம்

31-ம் ஆண்டாக பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் - பக்தி பரவசத்துடன் கான வந்த பக்தர்கள்.!

31-ம் ஆண்டாக பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் - பக்தி பரவசத்துடன் கான வந்த பக்தர்கள்.

https://www.newstodaytamil.com/Annamalayar-temple-vifeo-15-minutes

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு கிராமத்தில்‌ உள்ள ஐயப்பன் கோயிலில் ஐயப்ப சேவா பக்தர்களின் 31-ஆம் ஆண்டு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. இதில் 48 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள் 500 க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் சிவா குருசாமி தலைமையில் பூக்குழி இறங்கி சாமி தரிசனம் செய்தனர் . 

இந்த விழாவில் சுற்றுப்புற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.

இந்த பூக்குழி 16 அடி நீளமும் நான்கு அடி அகலமும்  அமைக்கப்பட்டு மாலை முதல் அக்கினி வளர்க்கப்பட்டு இரவு  பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.