ரசாயனம் கலந்த பாலை விற்பனை செய்யும் நிறுவனம்.! ஒரு கிலோ ரசாயனத்தில் 500 லி பால்?
இந்தியா
அகர்வால் ஸ்வீட்ஸ் எனும் நிறுவனம் ஒரு கோடியே எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் லிட்டர் (1,08,50,000 லிட்டர்) பால் தயாரிப்பதற்கான உபகரணங்கள் புலந்த்ஷாஹரைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய் அகர்வாலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
புலந்த்ஷாஹரின் அகர்வால் டிரேடர்ஸின் அஜய் அகர்வாலின் தொழிற்சாலையில் இருந்து 21,700 கிலோ ரசாயனம் மீட்கப்பட்டுள்ளது. 1 கிலோ ரசாயனத்திலிருந்து 500 லிட்டர் பால் தயாரிக்கலாம் என்கின்றனர்.
மேலும் புலந்த்ஷாஹர் என்ற இந்த ஒரு நகரத்தில் இப்படிப் பல தொழிலதிபர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்.
இந்த ரசாயனம் சீனாவில் கொண்டு வரப்படுவதாகவும் தகவல்கள். இது போன்று ரசாயன பொருட்கள் கலப்படம் என்பது மக்களின் உயிருக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதே செய்தியின் நோக்கம்