உ.பி.யில் கலவரம் நடந்த இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்.! திருப்பி அனுப்பிய போலீசார்.!
Rahul gandhi
உத்தரப் பிரதேசத்தில் வன்முறை நிகழ்ந்த சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காஸிப்பூர் எல்லையில் உ.பி.போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அரசியல் சாசன சட்டம் எனக்கு கொடுத்துள்ள உரிமைகள் மறுக்கப்படுகின்றன என போலீசுக்கு எதிராக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புதிய இந்தியாவில் அம்பேத்கரின் அரசியல் சாசன சட்டத்திற்கு முடிவுரை எழுதப் பார்க்கிறார்கள் எனவும் ராகுல்காந்தி ஆவேசமாக பதலளித்தார்.
மேலும் உ.பி. காங்கிரஸார் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறையினர் ராகுல் காந்தியிடம் பேசி சம்பவ இடத்திற்குள் நுழைய விடாமல் பாதுகாப்பு கருதி திருப்பி அனுப்பினர்.
இச்சம்பவத்தை ஒட்டி INDIA கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.Whatsap
மேலும் INDIA கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு மக்களவையில் இருந்து கண்டனங்களை பதிவு செய்து வெளிநடப்பு செய்தனர்.

