டிரங் பெட்டியில் கள்ளக் காதலன். ! அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார்.! சமூக வலைதளத்தில் உலவும் வீடியோ.!

உத்திரபிரதேசம்

டிரங் பெட்டியில் கள்ளக் காதலன். ! அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார்.! சமூக வலைதளத்தில் உலவும் வீடியோ.!

சமீபகாலமாகவே உத்தரபிரதேசத்தில் வரும் சம்பவங்கள் விநோதமாகவும், அதேசமயம் அதிர்ச்சி தரக்கூடியதாகவும் அமைந்து வருகிறது. தற்போதுகூட, ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை உறுதியாக தெரியாவிட்டாலும், சம்பவ அதிர்ச்சியின் அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை.

உத்தரபிரதேசத்தின் ஆக்ராவை சேர்ந்தவர்கள் இந்த தம்பதி..இந்த தம்பதியுடன், லாரி டிரைவரின் தம்பியும் அதே வீட்டில் தங்கி வந்துள்ளார்.. இதில் கணவன் லாரி டிரைவராக உள்ளார்.. இதனால் தன்னுடைய வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வருவது வழக்கமாகும்.

அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன், மனைவிக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது.. பெரும்பாலும் கணவர் வெளியே சென்றுவிட்டால், கள்ளக்காதலனை வீட்டுக்கு வரசொல்லிவிடுவாராம் அந்த பெண்.

வீட்டுக்குள் நுழைந்தது யார்

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, வேலை காரணமாக, லாரி டிரைவர் வீட்டை விட்டு கிளம்பி சென்றுவிட்டார். உடனே மனைவியும், தன்னுடைய காதலனை வீட்டுக்கு வரவழைத்து, இருவருமே உல்லாசமாக இருந்துள்ளனர்... அப்போது, இருவரும் அக்கம் பக்கம் ஆட்கள் இருப்பதை மறந்து, சத்தமாக பேசி சிரித்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

நள்ளிரவில் திடீரென அண்ணியின் அறையிலிருந்து பேச்சுக்குரல் கேட்டுள்ளது.. இந்த சத்தம், அதே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மைத்துனர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்குமே கேட்டுள்ளது.

இதனால், கண்விழித்த மைத்துனருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. அண்ணி தனியாக இருக்கும்போது, வேறு யாராவது உள்ளே புகுந்து தொல்லை தருகிறார்களா? என்று கலக்கமடைந்துள்ளார்.. அதற்குள் பக்கத்து வீட்டினரும் அங்கு திரண்டு வந்துவிட்டார்கள்.. அனைவரும் சேர்ந்து, அண்ணியின் ரூம் கதவை தட்டியிருக்கிறார்கள்.. பிறகு கதவு திறந்ததுமே, அந்த அறையில் அண்ணி மட்டுமே வெலவெலத்து காணப்பட்டார்..

அறைக்குள் யாரது

இவ்வளவு நேரம், பெரிதாக பேச்சு சத்தமும் சிரிப்புமாக கேட்ட நிலையில், அறைக்குள் யாரையுமே காணோமே? என்று அனைவரும் குழம்பி நின்றுள்ளனர். ஆனாலும் சந்தேகம் அடையாமல் அந்த அறையிலேயே யாராவது இருக்கிறார்களா? என்று மீண்டும் தேடி பார்த்தார்கள்.

அப்போது, அங்கிருந்த ஒரு டிரங்க் பெட்டியை திறந்து பார்த்துள்ளனர்.. அதில் கள்ளக்காதலன் அரை நிர்வாண கோலத்தில் பதுங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு மைத்துனர் உட்பட ஒட்டுமொத்த பேரும் அந்த நபரை டிரங்க் பெட்டியிலிருந்து வெளியே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள்.. இதனை அவர்களே வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகியிருக்கிறது..