ஷிண்டே ஆதரவே தேவை இல்லை.. மகாராஷ்டிரா முதல்வராகிறார் பட்நாவிஸ்? பாஜக எடுக்கும் துணிச்சல் முடிவு?

ஷிண்டே ஆதரவே தேவை இல்லை.. மகாராஷ்டிரா முதல்வராகிறார் பட்நாவிஸ்? பாஜக எடுக்கும் துணிச்சல் முடிவு?

மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பாஜகவில் இருந்துதான் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது தற்போது முதல்வராக உள்ள சிவசேனாவின் ஷிண்டே முதல்வராக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது

மகாயுதி கூட்டணியில், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அகியோர் போட்டியில் உள்ளனர். இதில் ஏக்நாத் ஷிண்டே தற்போது முதல்வராக உள்ளார். பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார் என்கிறார்கள். ஆனால் பாஜக கிட்டத்தட்ட தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது.

இத்தனை ஆண்டுளாக பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தார். அவர் மீண்டும் முதல்வராகவே விரும்புவார். அவர் முதல்வர் ஆகும் பட்சத்தில் ஏக்நாத் ஷிண்டே கூட்டணியை முறிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இப்படிப்பட்ட குழப்பான சூழலில்தான் பாஜகவில் இருந்துதான் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் பாஜக தனிப்பட்ட வகையில் 132 இடங்களை வென்றுள்ளதால்.. பாஜகவே முதல்வர் பதவியை ஏற்க விரும்பும். பாஜக மெஜாரிட்டி பெற 13 இடங்களே போதும். இதனால் ஷிண்டே ஆதரவே தேவை இல்லை.. அஜித் பவார் ஆதரவுடன் முதல்வராகலாம்.

இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளன. ஷிண்டே முதல்வர் பதவியை இழக்க நேரிடலாம். ஷிண்டே எதிர்த்தால்.. அவரின் கட்சி பிரிவு உடைக்கப்பட்டு வாய்ப்புகளும் உள்ளன. இதனால் மீண்டும்.,. கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து தேவேந்திர பட்னாவிஸ் அங்கே முதல்வராகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.