செங்கோட்டை வழியாக திருவனந்தபுரத்திற்கு ரயில் இயக்க பயணிகள் சங்கம் தென்காசி எம்பி க்கு கோரிக்கை மனு.!

தென்காசி

செங்கோட்டை வழியாக திருவனந்தபுரத்திற்கு ரயில் இயக்க பயணிகள் சங்கம் தென்காசி எம்பி க்கு கோரிக்கை மனு.!

செங்கோட்டை வழியாக திருவனந்தபுரத்திற்கு ரயில் இயக்க பயணிகள் சங்கம் தென்காசி எம்பி க்கு கோரிக்கை மனு

தென்காசி ஏப்ரல் 22

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக திருவனந்தபுரத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் சங்கம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவதுதினசரி காலையிலும் மாலையிலும் நெல்லை திருவனந்தபுரம் மற்றும் திருவனந்தபுரம் நெல்லைக்கு தினசரி முன்பதிவு இல்லாத புதிய ரயில்களை இயக்க வேண்டும் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம் வழியாக இந்த ரயிலை இயக்க வேண்டும்.

அது போல் மதுரை திருவனந்த புரம் மற்றும் திருவனந்தபுரம் மதுரை இடையே விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம் வழித்தடத்தில் தினசரி முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க வேண்டும் செங்கோட்டை கோவை மற்றும் கோவை செங்கோட்டை இடையே பழனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி வழியாக ரயில்கள் இயக்க வேண்டும் தற்போது வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வரும் செங்கோட்டை தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களை தினசரி இரு மார்க்கத்திலும் இயக்க வேண்டும்

மும்பை டில்லி மைசூர் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நெல்லையிலிருந்து தென்காசி மார்க்கமாக புதிய ரயில்கள் இயக்க வேண்டும் இந்த ரயில்களை திருப்பதி வழியாக இயக்க வேண்டும்.

செங்கோட்டையில் இருந்து தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திருச்சி விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சென்னைக்கு அம்ரூத் பாரத் ரயில்கள் இயக்க வேண்டும் தென்காசியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் செங்கோட்டையில் தற்போது மூன்று நடை மேடைகளே உள்ளனர் மேலும் இரண்டு நடை மேடைகள் அமைக்க வேண்டும்.

செங்கோட்டை விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் செங்கோட்டையில் பிட் லைன் அமைக்க வேண்டும் தென்காசி நெல்லை பாதை மற்றும் செங்கோட்டை கொல்லம் பாதையில் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களிலும் பிளாட்பாரம்களில் உயரத்தையும் நீளத்தையும் அதிகரிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த மனுவினை செங்கோட்டை ரயில்வே பயணிகள் சங்க தலைவர் முரளி செயலாளர் கிருஷ்ணன் உப தலைவர் ராகவேந்திர ராவ் இணைச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் மக்கள் தொடர்பாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் அனுப்பி உள்ளனர்.

செய்தியாளர்

AGM கணேசன்