தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 7 பேர்பலி 66 பேர் படுகாயம் .!
தென்காசி
தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
7 பேர்பலி 66 பேர் காயம்
அமைச்சர் - எம் பி - எம்எல்ஏ க்கள் ஆறுதல்
தென்காசி, நவ - 24
தென்காசி அருகே உள்ள இடைகால் பகுதியில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பஸ்ஸில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஒருவர் திருநெல்வேலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 60 பேர் தென்காசி அரசு மருத்துவமனையிலும் திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் 6 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்
பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தென்காசி எம்.பி டாக்டர் ராணி,மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் செகிருஷ்ண முரளி, ராஜா, டாக்டர் சதன் திருமலை குமார், மதிமுக துணை பொதுச்செயலாளர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், ஆகியோர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் நேற்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லி
புத்தூர் சென்று கொண்டிருந்தது அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த எம்.ஆர். கோபாலன் ஆகிய இரண்டு தனியார் பேருந்துகளும் இடைகால் அருகிலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 7 உயிரிழந்தனர்.மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப் படுகிறது.
40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று மீட்புபணிகளை தீவிரப்படுத்தினர். மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் இது பற்றி உடனடியாக தமிழக முதலமைச்சருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், தென்காசி அருகே நடைபெற்ற பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்கு உள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆரை தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதி செய்யுமாறு உத்தர விட்டுள்ளேன்.
மேலும் இந்த விபத்தில் சிக்கி
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும். எனக் கூறியுள்ளார்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 ம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு மருத்துவரிடம் உரிய உயரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்பின் விபத்தில் பலியான நபர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.இந்த விபத்துக்கு காரணமான ஒரு தனியார் பஸ்ஸின் உரிமம் ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே.கமல் கிஷோர். தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
AGM கணேசன்
