வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

இன்று (21.11.2024) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில், உயிர்பன் முகத்தன்மை, தரிசு நில மேம்பாடு மற்றும் விவசாய உற்பத்தியில் ஏற்படும் சவால்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப. தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பி.குமாரவேல்பாண்டியன், இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் பி.முருகேஷ், இ.ஆ.ப., தமிழ்நாடு நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் துணை தலைவர் / மேலாண்மை இயக்குநர், ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., இயக்குநர், சர்க்கரைத் துறை இயக்குநர் த.அன்பழகன்,இ.ஆ.ப., தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக துணை வேந்தர் வி.கீதாலட்சுமி, தலைமைப் பொறியாளர் (வே.பொ) ஆர்.முருகேசன் Safe Earth Solution Ltd., Bristol UK மைக்கல்பார்மர், தலைமைச் செயல் அலுவலர் மற்றும் பால் மனோகரன் ஆஸ்திரேலியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.