டெல்லியில் பாஜக ஆட்சி பிடித்ததை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் .!

சென்னை

சென்னை நங்கநல்லூரில் பாஜக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 27 ஆண்டுகள் கழித்து டெல்லியில் பாஜக ஆட்சி பிடித்ததை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் 

தலைநகர் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதனுடைய வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வந்தது அதில் காலை முதலே பாஜக முன்னிலையில் இருந்து வந்த நிலையில் மாலைப்பொழுது முடிவிற்குள் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 

இதனை அடுத்து 27 ஆண்டுகள் கழித்து டெல்லியில் பாஜக ஆட்சி பிடித்ததை கொண்டாடும் வகையில் சென்னை நங்கநல்லூரில் பாரதிய ஜனதா கட்சியின் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மூவரசம்பேட்டை குளம், நங்கநல்லூர் மார்க்கெட், பழவந்தாங்கல் வேம்புலி அம்மன் கோவில் அருகே ஆகிய இடங்களில் மாவட்ட தலைவர் ஜி குமார் அவர்களின் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினார்

இந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது நங்கநல்லூர் மண்டல் தலைவர் ராமகோபாலன் மற்றும் சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்